பிரதம நீதியரசர் பக்கச்சார்பானவர்– சரத் என் சில்வா
Thursday, October 9, 20140 comments
தற்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பக்கச்சார்பானவர் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் தவணைக்காக போட்டியிட முடியுமா என்பது தொடர்பில் வழக்கு விசாரணை செய்யப்பட்டால் அந்த விசாரணைகளில் மொஹான் பீரிஸ் பங்கேற்கக் கூடாது.
அவ்வாறு பங்கேற்றால் அதற்கு எதிர்ப்பை வெளியிடுவேன்.
அண்மையில் ஜனாதிபதி வத்திக்கானுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அவர்களும் இணைந்து கொண்டிருந்தார்.
இதன் மூலம் அவர் பக்கச்சார்பானவர் என்பது வெளிச்சமாகியுள்ளது.
எந்தவொரு காரணத்திற்காகவும் ஜனாதிபதியுடன் இவ்வாறான ஒர் விஜயத்தில் பிரதம நீதியரசர் பங்கேற்க முடியாது.
18ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இரண்டாம் தவணைக்காக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாகவும், இதனால் மூன்றாம் தவணைக்காக போட்டியிட முடியாது எனவும் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment