தேசத்துரோகி பட்டியலின் முதலிடத்தில் உள்ளவர் மஹிந்த ராஜபக்ஷ : சரத்பொன்சேகா
Thursday, October 9, 20140 comments
இலங்கை அரசியல் யாப்பின் அடிப்படையில் ஒருவர் மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது. அரசியல் யாப்பையும் நாட்டின் சட்டதிட்டங்களையும் மீறி ஒருவர் செயற்படுவாராயின் அவர் தேசத்துரோகியாகவே கருதப்படுவர்.
அந்தவகையிலேயே ஜனாதிபதி மஹிந்தவும் அரசில் யாப்பிற்கு முரணான வகையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிட்டால் அவர் ஒரு தேசத்துரோகியாவார்.
எனவே தேசத்துரோகிகள் பட்டியலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே முதலிடத்தில் உள்ளார் என சுட்டிகாட்டியுள்ள ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா அவ்வாறானதொரு சட்டவிரோத தேர்தலில் ஜனநாயக கட்சி தேர்தலை புறக்கணிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக கட்சியினால் கோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment