உயர்பீட கூட்டத்தின் பின்னர் மு.கா.வின் ஜனாதிபதி தோர்தல் முடிவு
Sunday, October 19, 20140 comments
இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ள மு.கா. உயர்பீட கூட்டத்தின் பின்பே ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு வெ ளியிடப்படும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி ஊடவுள்ளது. இதன்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான முடிவுகள் எடுக்கப்படவுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதா? அல்லது எதிர்கட்சி பொது வேட்பாளருக்கு ஆதரவை வழங்குவதா என்கிற முடிவு இத்போதே எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் முஸ்லிம் காங்கிரஸின் உடன்படிக்கைகளை இதுவரை காலமும் சரிவர நிறைவேற்றியது கிடையாது. இதனால் நாம் ஜனாதிபதி தேர்தலின்போது எந்த கட்சியுடனும் அணிசேராது இருக்கவிருக்கிறோம். அத்தோடு ஒப்பந்தங்கள் செய்து இணக்கப்பட்டின் அடிப்படையில் யாருக்காவது ஆதரவு வழங்குவதாயின் அது எழுத்து மூலமான ஒப்பந்தமாக அமையும் எனவும் ஷபீக் ரஜாப்தீன் தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment