ராஜபக்ஷ குடும்பம் இருக்கும்வரை கண்டியில் அபிவிருத்தி கிடையாது -லாபிர் ஹாஜியார்
Sunday, October 19, 20140 comments
ராஜபக்ஷ குடும்பத்திடம் நாட்டின் தலைமைத்துவம் இருக்கும் வரை கண்டியில் அபிவிருத்திகளை எதிர்ப்பார்க்க முடியாது என தெரிவித்த மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபிர் ஹாஜியார் (ஜெய்னுலாப்தீன்) கண்டி மக்களுக்கு சேவை செய்யும் ஐ.தே.க. அரசை உறுவாக்க மக்கள் திடசங்கப்பட்பூணுவதன் மூலம் கண்டி மாவட்டத்தை கட்டியெழுப்பலாம் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, கண்டி மாவட்ட தமிழ், முஸ்லிம் பிரதேசங்களை அரசாங்கம் தொடர்ந்தும் புறக்கணித்து வருவதாகவும் குற்றம் சுமத்தினார்.
ஹேவாஹெட்டதேர்தல் தொகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றிபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு முஸ்லிம் அமைச்சர் இரு முஸ்லிம் பிரதியமைச்சர்கள் அடங்களாக ஏழு அமைச்சர் பிரதியமைச்சர்கள் இருக்கின்றனர். பிரதமரும் கண்டியைசேர்ந்தவரே. எனினும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு அதிபர்கள், ஆசிரியர்களை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்கள் நிலவி வருகின்றன.
இதேவேளை, கண்டி மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் வீதிகள் செப்பனிடப்படாமல் இருக்கின்றன. அமைச்சர்களினதும் ஆளும் கட்சியின் பிரமுகர்களின் வீடுகளுக்கு செல்வதற்குமே காபட் வீதிகள் போடப்பட்டிருக்கின்றன. மக்களின் வரிப்பணத்தில் அரசியல்வாதிகள் சுகபோகம் அனுபவிக்கின்றனர்.
மக்கள் தொகை குறைந்த மாவட்டமான ஹம்பாந்தோட்டையில் பாரியளவிலான அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனபோது பல அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும் இருக்கும் கண்டி மாவட்டத்தில் குறிப்பிட்டு சொல்லிக்கொள்ளும் அளவிலான அபிவிருத்தி பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. கண்டி மாவட்ட ஆளும் கட்சி பிரமுகர்களுக்கு முதுகெலும்பு இல்லாமையினாலேயே இங்கு அபிவிருத்தி பணிகளைகொண்டு வர முடியாமல் போயுள்ளது.
ராஜபக்ஷ குடும்பத்திடம் நாட்டின் தலைமைத்துவம் இருக்கும் வரை கண்டியில் அபிவிருத்திகளை எதிர்ப்பார்க்க முடியாது. அவர்களின் ஆட்சி காலத்தில் கண்டி மாவட்டம் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றது. எனவே எதிர்வரும் தேர்தலில் கண்டி மக்களுக்கு சேவை செய்யும் ஐ.தே.க. அரசை உறுவாக்க மக்கள் திடசங்கப்பட்பூண வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment