தேசிய ஷூறா சபை மாத்தறை முஸ்லிம்களுடனான சந்திப்பு

Friday, October 17, 20140 comments

மாத்தறை மாட்டத்தின் உலமாக்கல், அனைத்து மஸ்ஜித்களினதும் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள்  உட்பட, ஆசிரியர்கள், துறை சார் நிபுணர்கள், அரச சேவை உத்தியோகத்தர்கள், இஸ்லாமிய மற்றும் சமூக சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள், வியாபாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூக நலன்விரும்பிகளை தேசிய ஷூறா சபை எதிர்வரும் 2014/10/18 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.45 தொடக்கம் நண்பகல் 12 மணி வரை மாத்தறை கடவீதி மீரா ஜும்ஆ பள்ளிவாசலில் சந்திக்கின்றது.

இன்றைய சூழலில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள், இஸ்லாமிய வழிகாட்டலில் சகோதர இன மக்களுடனான சகவாழ்வு மற்றும் சட்ட-ஒழுங்கு முறைமை பற்றி  பிரதேச மட்டத்தில் முஸ்லிம் தலைமைகள் அறிவூட்டப்பட வேண்டும் எனும் நோக்கில் தேசிய ஷூறா சபை பல திட்டங்களை நாடு பூராகவும் முன்னெடுத்து வருகின்றது.

குறித்த நிகழ்வில், மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த கல்வி அமைச்சர் பதியுதீன் மஹ்மூத் அவர்களின் புதல்வரும் தேசிய ஷூறா சபையின் தலைவருமான சகோதரர்  தாரிக் மஹ்மூத், தேசிய ஷூறா சபையின் பிரதித் தலைவர்களான; முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வெளிநாட்டு தூதுவருமான ஜனாதிபதி சட்டத்தரணி சகோதரர் M.M. ஸுஹைர், ஜாமியா நளீமியா கலாபீடத்தின்   சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்-ஷேக் S.H.M. பளீல் ஆகியோர் உட்பட,  தேசிய ஷூறா சபையின் பல சிரேஷ்ட உறுப்பினர்களும், இஸ்லாமிய அமைப்புக்களின் பிரதிநிதிகளும், துறை சார்ந்த நிபுணர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.தேசிய ஷூறா சபை மாத்தறை மாவட்ட முஸ்லிம்களுடனான சந்திப்பு

மாத்தறை மாட்டத்தின் உலமாக்கல், அனைத்து மஸ்ஜித்களினதும் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள்  உட்பட, ஆசிரியர்கள், துறை சார் நிபுணர்கள், அரச சேவை உத்தியோகத்தர்கள், இஸ்லாமிய மற்றும் சமூக சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள், வியாபாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூக நலன்விரும்பிகளை தேசிய ஷூறா சபை எதிர்வரும் 2014/10/18 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.45 தொடக்கம் நண்பகல் 12 மணி வரை மாத்தறை கடவீதி மீரா ஜும்ஆ பள்ளிவாசலில் சந்திக்கின்றது.

இன்றைய சூழலில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள், இஸ்லாமிய வழிகாட்டலில் சகோதர இன மக்களுடனான சகவாழ்வு மற்றும் சட்ட-ஒழுங்கு முறைமை பற்றி  பிரதேச மட்டத்தில் முஸ்லிம் தலைமைகள் அறிவூட்டப்பட வேண்டும் எனும் நோக்கில் தேசிய ஷூறா சபை பல திட்டங்களை நாடு பூராகவும் முன்னெடுத்து வருகின்றது.

குறித்த நிகழ்வில், மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த கல்வி அமைச்சர் பதியுதீன் மஹ்மூத் அவர்களின் புதல்வரும் தேசிய ஷூறா சபையின் தலைவருமான சகோதரர்  தாரிக் மஹ்மூத், தேசிய ஷூறா சபையின் பிரதித் தலைவர்களான; முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வெளிநாட்டு தூதுவருமான ஜனாதிபதி சட்டத்தரணி சகோதரர் M.M. ஸுஹைர், ஜாமியா நளீமியா கலாபீடத்தின்   சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்-ஷேக் S.H.M. பளீல் ஆகியோர் உட்பட,  தேசிய ஷூறா சபையின் பல சிரேஷ்ட உறுப்பினர்களும், இஸ்லாமிய அமைப்புக்களின் பிரதிநிதிகளும், துறை சார்ந்த நிபுணர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham