ஊவா மாகாண சபை உறுப்பினர் சாலிய சுமேத சபையின் பிரதி தவிசாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இந்த பதவியில் இருந்து கொண்டு பொதுமக்களுக்கு சேவை செய்ய முடியாது என்பதால், வேறு பதவியை எதிர்பார்த்து தான் இந்த பதவியை ராஜினாமா செய்ததாக அவர் கூறியுள்ளார்.
பிரதி தவிசாளர், ஆளும் கட்சியின் அமைப்பாளர் பதவிகளில் இருந்து கொண்டு வேறு பணிகளை மேற்கொள்ள முடியாது.அனுபவத்தின் அடிப்படையில் மக்களுக்கு சேவை செய்யக் கூடிய பதவியை பெற்று சேவைகளில் ஈடுபடவே எதிர்பார்த்துள்ளேன்.
அமைச்சர் சுமேதா ஜீ. ஜயசேனவின் மகனான சாலிய சுமேத கடந்த 9 ஆம் தகதி ஊவா மாகாண சபையின் பிரதி தவிசாளராக பதவியேற்றார்.

Post a Comment