அரசாங்கத்தை விட்டு விலகப் போவதாக அதுரலிய ரதன தேரர் எச்சரிக்கை
Sunday, October 12, 20140 comments
அரசாங்கத்தை விட்டு விலகப் போவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் அதுரலிய ரதன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசியல் சாசனத்தில் தாம் முன்வைத்த திருத்தங்கள் மேற்கொள்ளாவிட்டால் அரசாங்கத்தை விட்டு விலக நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
சில முக்கியமான அமைச்சர்களுடன் இணைந்து ஆளும் கட்சியை விட்டு வெளியேற நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்கள வரையறுக்கப்பட வேண்டும், 17ம் திருத்தச் சட்டம் மீளவும் அமுல்படுத்தப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
தமது கோரிக்கைகளுக்கு உரிய பதில் அளிக்கப்படாவிட்டால் புதிய வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடச் செய்ய ரதன தேரர் திட்டமிட்டுள்ளார்.
எதிர்வரும் 14ம் திகதி ரதன தேரர் ஆளும் கட்சியை விட்டு வெளியேறக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment