யாருக்கு ஆதரவு – தீர்மானம் இல்லை – மு.கா
Sunday, October 12, 20140 comments
அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வு அறிவிப்பு வெளியானதன் பின்னரே, எந்த தரப்புக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கட்சியின் பொது செயலாளர் ஹசன் அலி இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்னும் ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில், இது குறித்து எதனையும் கூற முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீடம் ஒன்று கூடி இதற்கான இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment