அமைச்சர் ஜனக பண்டார ஆளுங்கட்சி மீது அதிருப்தி
Monday, October 20, 20140 comments
அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் ஆளுங்கட்சி மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊடகவியலாளர் ஒருவரிடம் கருத்துத் தெரிவித்துள்ள அவர்,
நியாயமான செயற்திட்டங்களை உடைய ஒருவருடன் எதிர்காலத்தில் இணைந்திருப்பதற்கு விருப்பம் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக அமைச்சரின் நிலைப்பாடு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
இதுவரை காலமும் கட்சிக்காக உழைத்திருக்கின்றோம். எதிர்காலத்தில் நியாயமான செயற்திட்டங்களை கொண்டிருப்பவர்களுடன் இணைந்து செயலாற்றுவது எனது விருப்பம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர் தனது கருத்தை வெளியிடும்போது மஹிந்த மீண்டும் வெற்றி பெறுவார் என்றோ, தான் தொடர்ந்தும் சுதந்திரக் கட்சியில் இருக்கப் போவதாகவோ கருத்து வெளியிடவில்லை.
அதன் மூலம் மஹிந்தவின் வெற்றி சந்தேகம் என்பதையும், தான் சந்திரிக்கா அணியில் இணைந்து கட்சி மாறப்போவதையும் அமைச்சர் சூசகமாக குறிப்பிட்டுள்ளதாக ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment