களனிப் பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் ஒன்றுகூடல் ஒன்று நாளை மறுதினம் கொழும்பில் இடம்பெறவுள்ளது.
களனிப் பல்கலைக்கழகத்தில் கற்று வெளியாகிய முஸ்லிம் பட்டதாரிகளுக்கும் மற்றும் தற்போது கற்றுக் கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்குமான இந்த ஒன்று கூடல் நாளைமறுதினம் புதன் கிழமை தீபாவளி தினத்தன்று மு.ப. 8.00 மணி முதல் பி.ப. 2.00 மணி வரை இல. 149, மாளிகாகந்தை வீதி, கொழும்பு மருதானை இல் அமைந்துள்ள ஜம்மியத்துஷ் ஷபாப் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் களனி பல்கலைக்கழக பழைய மாணவர்களான முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாகிர் மாக்கார், முஸ்லிம் கௌன்சில் தலைவரும் நவமனி பத்திரிகை பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் உட்பட மேலும் பல பிரமுகர்கள் மற்றும் அதிதிகள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்நிகழ்வுக்கு களனிப் பல்கலைக்கழகத்தில் கற்றுப் பட்டம் பெற்ற அனைத்து பட்டதாரிகளையும் கலந்து சிறப்பிக்கும்படி முஸ்லிம் மஜ்லிஸ் வேண்டிகொள்கிறது.
இட ஏற்பாடுகள், உபசார ஏற்பாடுகள் நிமித்தம் கலந்து கொள்ளும் அனைவரும் தங்களது பெயர்களை பதிந்து கொள்ளும்படி மஜ்லிஸ் வேண்டிக் கொள்கிறது. மேலும், பெண்களுக்கு குடும்ப அங்கத்தவர்களோடு கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பதிவுகளுக்கும் மேலதிக விபரங்களுக்கும் - ஹஸீப் மரிக்கார் (முஸ்லிம் மஜ்லிஸ் தலைவர்)
தொ.இல. - 071 - 5888878/ 077 - 5599868
களனிப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் ஒன்று கூடல்
Monday, October 20, 20140 comments
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment