அரசாங்கம் ஆட்டம் காணுகிறது; கட்சி தாவும் முக்கிய அமைச்சர்கள்?
Thursday, October 9, 20140 comments
அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலரும் கடும் அதிருப்தி மனோநிலையில் இருப்பதால், அரசாங்கத்தின் அடித்தளம் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது.
தற்போதைய தகவல்களின் படி ஆளுந்தரப்பின் சிரேஷ்ட அரசியல்வாதிகளில் பலரும் கட்சி தாவி ஐ.தே.க. வுடன் இணைந்து கொள்வது அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டே தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சிரேஷ்ட பெண் அமைச்சர் சுமேதா உள்ளிட்டோருடன் இளம் அரசியல்வாதிகள் பலரும் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பாக நாட்டம் கொண்டுள்ளனர்.
மொனராகலைக்கு எதுவிதத்திலும் தொடர்பில்லாத சஷீந்திரவை முதலமைச்சராக்கி, இளம் வயது அரசியல்வாதியான அவருக்கு முன் தனது அதிகாரத்தை செல்லாக்காசாக்கியது தொடர்பில் அமைச்சர் சுமேதா கடும் அதிருப்தியுடன் இருக்கின்றார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment