அரசாங்கத்தின் சில அரசியல்வாதிகள் திருடர்கள்: ஆளும் கட்சி எம்.பி
Thursday, October 9, 20140 comments
நாட்டில் உள்ள சில அரசியல்வாதிகள் அரச வளங்களை கொள்ளையிடுவதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹொரணையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்தில் இருக்கும் சில அரசியல்வாதிகள் அரச சொத்துக்களையும் வளங்களையும் கொள்ளையிடுகின்றனர்.
களவாக மரங்களை வெட்டுகின்றனர். மணல் அகழ்கின்றனர். இலஞ்ச, ஊழல்களில் ஈடுபட்டு பணத்தை சம்பாதிக்கின்றனர்.
மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை பயன்படுத்தும் இவர்கள், ஆடம்பர மாளிகைகளில் சுகபோகமாக வாழ்கின்றனர். இதனை பார்க்கும் எமது பிள்ளைகள் அவர்களை பின்பற்ற முயற்சிக்கின்றனர்.
முன்னேற சிறந்த வழி இதுதான் என சிந்திக்கும் பிள்ளைகள் தவறான வழிகளில் செல்ல தூண்டப்படுகின்றனர் எனவும் விதுர விக்ரமநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment