2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உத்தேசித்துள்ளதாக ரொய்டர்ஸ் சர்வதேச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்களை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரபல்யம் வீழ்ச்சியடைந்து செல்வதாகவும் இதனால் பதவிக் காலம் நிறைவடைவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்னதாகவே தேர்தலை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதாக அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன. எதிர்வரும் நவம்பர் மாதம் 19ம் திகதியின் பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடாத்த முடியும்.
எதிர்க்கட்சிகள் வலுவான நிலையை எட்டுவதற்கு முன்னதாகவே ஜனாதிபதி தேர்தலை நடாத்தும் முனைப்புக்களில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு மக்கள் மத்தியில் காணப்பட்ட செல்வாக்கும் ஆதரவும் கிரமமாக வீழ்ச்சியடைந்து செல்கின்றது.
எனினும் கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக்கொண்ட 58 வீத வாக்குகளைப்பெற்றுக்கொள்ளக் கூடிய சாத்தியங்கள் இல்லை என அரசியல் ஆய்வாளர் சாசா ரைஸர் கொஸ்டிஸ்கீ தெரிவித்துள்ளார்.
மூன்றாவது தடவையிலும் வெற்றியீட்டக் கூடிய வாய்ப்புக்கள் உண்டு என்ற போதிலும் பெரும்பான்மை வாக்குகளைப்பெற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தை முன்கூட்டியே சமர்ப்பிக்க தீர்மானித்தல், எரிபொருள் மின்சாரக் கட்டணங்களை குறைத்தல் மற்றும் தற்போது எரிவாயுவின் விலையை குறைத்தல் என பல்வேறு வழிகளில் அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலுக்கான முனைப்புக்களில் தீவிரம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், 9 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டால் பாப்பாண்டவர் இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவாரா என்பது சந்தேகமே என ரொய்டர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
2015 ஜனவரி ஒன்பதில் ஜனாதிபதி தேர்தல்
Thursday, October 9, 20140 comments
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment