தேர்தல்களுக்கு அரசு அஞ்சவில்லை - அஸ்வர் எம்.பி
Friday, October 10, 20140 comments
அரசாங்கம் தேர்தலை எதிர்கொள்ள அஞ்சவில்லை என ஆளும் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 250 ரூபாவினால் குறைத்துள்ளதுடன் மின்சார கட்டணத்தை 300 ரூபாவினால் குறைத்துள்ளது.
இதன் மூலம் அரசாங்கம் 550 ரூபா நிவாரணத்தை மக்களுக்கு வழங்கியுள்ளது.
அதேவேளை நாடாளுமன்றத்தினால் வழங்கப்படும் வாகனத்தை பெற்றுக்கொண்டு, நாடாளுமன்றத்தில் சாப்பிட்டு, நாடாளுமன்றத்தை குறைத்து மதிப்பிடும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
அரசாங்கம் தேர்தல்களுக்கு அஞ்சுவதில்லை, வடக்கு மாகாண சபைத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்பட்டது எனவே நாட்டில் ஜனநாயகம் ஒரே அளவில் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
யாழ் தேவி மீண்டும் பயணத்தை தொடங்கியுள்ளது, யாழ்ப்பாணம் இன்று முன்னேற்றமடைந்துள்ளது.
அங்குள்ள மக்களுக்கு சமாதானத்தின் பிரதிபலன்கள் கிடைத்து வருகிறது எனவும் அஸ்வர் கூறியுள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment