சந்திப்புக்கு முஹூர்த்தம் பார்த்துக்கொண்டிருக்கும் மு.கா.வும் கூட்டமைப்பும்
Friday, October 10, 20140 comments
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் அரசியல் ரீதியில் முக்கியமானதொரு சந்திப்பொன்றை நடத்துவதற்கான முனைப்புகள் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனினும் அது நடக்கும் ஆனால் நடக்காது என்றாற்போல் இருக்கிறது. மு.கா. செயலாளர் ஒரு பக்கம் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் கூட்டமைப்பின் எம்.பி.களான சுரேசும் சுமந்திரனும் அறிக்கைவிடுகின்றனர்.
இன்றுவரை சந்திப்புக்கான முகுர்த்ததையே பார்த்துக்கொண்டிருக்கின்றனர். சந்தித்தபாடேயில்லை. ஆரம்பத்தில் மு.கா. தலைவருக்கு சுகயீனம் காரணமாக சந்திக்க முடியமல் போனதாக மு.கா. வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேபோன்று கல்முனை சந்திப்பை அம்பாறை கூட்டமைப்பினர் எதிர்த்தனர். இது இப்படியிருக்க எதிர்ப்புக்கு காரணமாக அமைந்தவற்றை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளலாம் என கூட்டமைப்பு உயர்மட்டம் தெரிவித்தது.
இது இப்படியிருக்க கடந்த வாரம் ஜனாதிபதி தலைமையில் ஆளும் கூட்டணியிலுள்ள கட்சித் தலைவர்களின் அவசர கூட்டமொன்று அண்மையில் இடம்பெற்றது. இதன்காரணமாகவே ஹக்கீம் சந்திப்பை பிற்போட்டார். அவருக்கு எந்த நோயும் கிடையாது என்றும் செய்திகள் கசிந்தன. ஹக்கீம் தம்பிக்கு மஹிந்த நானாவை இப்போதைக்கு பகைத்துக்கொள்ளும் எண்ணம் கிடையாது. அத்தோடு கூட்டமைப்புடன் சந்திப்பு நடத்தியாவது மக்களை ஏமாற்றவும் வேண்டிய நிலையில் தம்பி இருக்கிறார். ஏனெனில் ரணில் நானா கரம் தற்போதைக்கு ஓங்க ஆரம்பித்துள்ளது. அவர் இப்போதைக்கு ஹக்கீமை தம்பியை சேர்த்துக்கொள்வதாக இல்லை. ஏனென்றால் பழைய கட்சி தாவிய கதையை ரணில் நானா மறந்து சேர்த்துக்கொண்டாலும் கட்சியிலுள்ள ஏனையோர் மு.கா.வையும் இ.தோ.கா.வையும் இணைத்துகொள்ள வேண்டிய அவசியம் கிடையாது என்கின்றனர். இந்நிலையில் ரணில் நானாவுக்கு சமிஞ்சையொன்றை காட்டவே சாரனை மடிந்துகட்டிக்கொண்டு சம்மந்தன் நானாவோடு சந்திக்க திட்டம்போட்டுள்ளார் ஹக்கீம் தம்பி. இந்நிலையில் சரத்தை அவிழ்த்துவிட்டு அவ்வப்போது மஹிந்த நானாவின் காலிலும் விழுகிறார் இந்த தம்பி. இதற்காகவே இந்த கூட்டமைப்பினருடனான சந்திப்பும் பிசுபிசுக்கின்றன.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment