இப்பாகமுவயில் விபத்து; கணவனும் மனைவியும் பரிதாபமாக பலி

Sunday, October 12, 20140 comments


தம்புள்ளை குருநாகல் வீதியில்  மோட்டார் சைக்கிலின் மீது டிப்பர் வாகனம் ஒன்று மோதியமையால் மோட்டார் சைக்கிலில் பயணித்த கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று பகல் 12:30 மணியளவில் இடம்பெற்றதாக எமது இப்பாகமுவ செய்தியாளர் தெரிவித்தார்.

இப்பாகமுவயிலிருந்து குருநாகல் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிலின் மீது தம்புளையில் இருந்து குருநாகல் நோக்கி சென்ற டிப்பர் வாகனாம் பின்னால் மோதியமையால் மொட்டார் சைக்கில் விபத்துக்குள்ளானது. மோதலுக்குள்ளன மோட்டார் சைக்கிலில் பயணித்தவர்கள் நிலத்தில் வீழ்ந்து டிப்பர் வாகனத்தின் டயரில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் உடணடியாக இப்பாகமுவ பொல்கொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் உயிரிழந்துள்ளனர்.

தோரயாயவைச் சேர்ந்த 62 வயதுடைய ஜமால்தீன் மொஹமத் சலீம் மற்றும் 52 வயதுடைய பாத்திமா ரஜீமா சம்பவத்தில் உயிரிழந்ழள்ளனர்.
டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை கொகரல்ல பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகபிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham