எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கவுள்ளதாக வெளியான தகவலை, அக்கட்சி மறுத்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் சகோதரரும் பேச்சாளருமான ஹபீஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சில இணையத்தளங்களில் ராஜபக்சவுக்கு, முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதில் எவ்வித உண்மையுமில்லை. இந்தநிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து கட்சி உறுப்பினர்களை ஆலோசித்தே தீர்மானம் எடுக்கப்படும் என்றும் ஹபீஸ் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment