அம்பாறை முஸ்லிம்கள் மத்தியயில் ஐ.தே.க.வின் செலல்வாக்கு அதிகாப்பு
Thursday, October 2, 20140 comments
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் மத்தியில் ஐக்கிய தேசிய கட்சியின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகமான முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களும் அரசின் ஏனைய பங்காளி கட்சிகளின் ஆதரவாளர்களும் தற்போது ஐ.தேக.வில் இணைந்து வருகின்றனர் என்று இங்கிருக்கும் அரசியல் அவதானியொருவர் தெரிவித்தார்.
அரசோடு தேனிலவு கொண்டாடிக்கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் மூலம் தமக்கு எவ்வித பிரயோசனமும் கிடையாது. மக்கள் அரசாங்கத்துக்கு பலத்தை கொடுக்க விரும்பாததன் காரணமாகவே மு.காவிற்கு ஆதரவளித்து அவர்களை வெற்றிபெறச் செய்தனர். எனினும் மக்களி ஆணையை மதிக்காத அவர்கள் அரசுடன் போய் தேர்ந்தனர். எதிர் தரப்பிலிருந்து எதனையும் செய்ய முடியாது என தெரிவித்தே இவ்வாறு அரசுடன் இணைந்தவர்கள் அங்கும் முடங்கியே கிடக்கின்றனர். சமூத்தை அபிவிருத்தி செய்யலாம் என்று கூறிக்கொண்டு சென்றவார்களால் சமூகத்திற்கு எவ்விதமான அபிவிருத்திகளும் கிடைக்கவில்லை.
மாறாக முஸ்லிம் விரோத போக்கே இந்த ஆட்சியில் இடம்பெற்றுள்ளது. இதனை தடுத்து நிறுத்தவோ, எதிர்த்து பேசவோ சக்தியின்றி அதிகார தரப்பின் காலடியை துடைத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே ஆட்சியை மாற்ற மு.கா.வை ஆதரித்து பலன் கிடையாது. நேரடியாகவே ஐ.தே.க.விற்கு ஆதரிப்பதன் மூலம் ஆட்சி மாற்றத்தை கொண்டுவரலாம் என்று மக்கள் தற்போது சிந்திப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment