வெலிமடை நகரில் விபத்து; சிறுவன் பலி
Thursday, October 2, 20140 comments
வெலிமடை நகருக்கு அருகில் இன்று (02) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
மோட்டார் சைக்கிள் ஒன்று பஸ்ஸுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தை அடுத்து பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment