பொதுபல சேனாவின் கோரிக்கையினை ஆர்எஸ்எஸ் அமைப்பு நிராகரிப்பு
Thursday, October 9, 20140 comments
இலங்கையின் பௌத்த கடும்போக்கு அமைப்புடன் கூட்டணி அமைக்க எவ்வித நோக்கமும் இல்லை என்று இந்தியாவின் இந்து தேசிய குழு ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கையின் பௌத்த கடும்போக்கு அமைப்பான பொதுபலசேனா நேற்று வெளியிட்ட தகவல் ஒன்றில், இந்தியாவின் ராஸ்ட்ரிய சுவாயம்சேவாக் சங்க் என்ற ஆர்எஸ்எஸ் என்ற அமைப்புடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தெரிவித்திருந்தது.
எனினும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேச்சாளர் ராம் மாதவ், இன்று வெளியிட்டுள்ள கருத்தில்,
பொதுபலசேனாவுடன் பங்காளித்துவம் தொடர்பில் எந்த தகவலையும் தாம் அறியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே பொதுபலசேனாவின் அறிவித்தல் ஏற்றுக்கொள்ளத்தக்க அறிக்கையல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பை பொறுத்தவரையில் அது பொதுவாக சர்வதேசத்தில் பங்காளித்துவத்தை கொண்டிப்பதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment