மலாலாவுக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு!
Friday, October 10, 20140 comments
இவ்வருடம் சமாதானத்திற்கான நோபல் பரிசு கல்வி செயற்பாட்டாளரான பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசாப்சாய்க்கு கிடைத்துள்ளது.
அத்துடன் சிறுவர் உரிமைக்காகப் போராடிவரும் இந்தியாவை சேர்ந்த கைலாஷ் சத்யார்த்திக்கும் சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இம்முறை சமாதானத்திற்கான நோபல் பரிசுக்காக பாப்பரசர் பிரான்சிஸ், எட்வட் ஸ்நோடன் மற்றும் மலாலா ஆகியோரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment