ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது? மக்களிடம் கருத்துக் கேட்க மு.கா. முடிவு
Friday, October 10, 20140 comments
2015 இல் நடத்துவதற்கு உத்தே சிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்த லில் தமது கட்சி எத்தகையை நிலைப் பாட்டை எடுக்கவேண்டும் என்பது பற்றி முஸ்லிம் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்துவதற்கு அரசின் பங் காளிக்கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
இது விடயம் குறித்து அடுத்த மாதம் முதல் மாவட்ட ரீதியாக மக்களிடம் அபிப்பிராயம் கோரப்படும் என்று மு.கா வின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி எம்.பி. நேற்று ‘சுடர் ஒளி’யிடம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் மு.கா., சிலவேளை அரசு ஜனாதிபதித் தேர்த லுக்குச் செல்லுமாயின் அதற்கும் தயா ராகும் வகையிலேயே மேற்படி முடிவை எடுத்துள்ளது எனக் கூறப்படு கின்றது. இது பற்றி அக்கட்சியின் அதி உயர்பீடக் கூட்டத்தில் விரிவாக ஆரா யப்படவுள்ளது.
குறிப்பாக இந்த அரசின் ஆட் சியில் முஸ்லிம் விரோதச் செயற் பாடுகள் அதிகரித்துள்ளதாலும், இவற்றுக்கு எதிராக சட்டம் உரிய வகையில் செயற்படாததாலும் முஸ் லிம் மக்கள் அரசு மீது அதிருப்திக் கொண் டுள்ளனர் என்றும், ஊவா மாகாண சபைத் தேர்தலில் இது வெளிப் படுத்தப்பட்டது என்றும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, மாற்றுத்தேவைப் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாய சுழ்நிலை முஸ்லிம் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில்கொண்டே மக்களிடம் கருத்துக் கேட்பதற்கு மு.கா. தீர்மானித்துள்ளது. 2010 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது எதிரணியின் பொது வேட்பாளரை மு.கா. ஆதரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment