அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும் மேர்வின் சில்வாவுக்கும் இடையில் முறுகல்
Friday, October 10, 20140 comments
கல்வியமைச்சருக்கோ அதிகாரிகளுக்கோ தேவையான விதத்தில் கல்வியில் மாற்றங்களை செய்ய முடியாது என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
களனி ஹூணுப்பிட்டிய பண்டாரநாயக்க கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கல்விக் கொள்கைகளை மாற்ற வேண்டாம். கன்னங்கர அவர்கள் ஆரம்பித்த இலவச கல்வியை தொடர வேண்டும். கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு விரும்பியபடி கல்வியை மாற்ற முடியாது.
இடி விழும் இடங்களில் இருப்பதற்கு நான் பயப்படுவதில்லை. இடி விழக்கூடிய பாவங்களை நான் செய்ததில்லை.
அண்மையில் ஒரு நாள் நான் கெபிலித்த பிரதேசத்திற்கு சென்றேன். அங்குதான் கதிர்காம கந்தன் தவ யோகியாக இருக்கின்றார்.
கடவுள் மேல் இருக்கும் அன்பில் அனைவரும் கதிர்காமத்திற்கு செல்வதில்லை. பக்தியும் இதற்கு காரணம் அல்ல.
தமது தேவைகளை நிறைவேற்றி கொள்ளவே அவர்கள் செல்கின்றனர். சிலர் தமது சட்டத்தரணிகள் போல் கடவுளை பயன்படுத்திக் கொள்கின்றனர். அது சரியல்ல எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment