VIBE X2 கைப்பேசியினை அறிமுகம் செய்யும் LENOVO

Monday, September 1, 20140 comments


முதற்தர கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Lenovo நிறுவனம் Vibe X2 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்து வருகின்றது.
இந்நிலையில் குறித்த கைப்பேசி தொடர்பான புகைப்படங்கள் மற்றும் ஏனைய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி 5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியில் 2.0 GHz மற்றும் 1.5 GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Cortex-A7 4 Core Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவற்கான கமெரா , 2,250 mAh மின்கலம் ஆகியனவும் தரப்பட்டுள்ளன.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham