பொதுபலசேனா - ரிஷாட் கூட்டு ஒப்பந்தம் என்ன?
Monday, September 1, 20140 comments
பொது பல சேனா அமைப்பிற்கும் அமைச்சர் ரிஷாடுக்கும் இடையில் ஒப்பந்தம் ஏதும் உள்ளனவா என்கிற சந்தேகம் இப்போது பலர் மனதில் எழுந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் அரசியல் வாதியொருவர் கதைத்து கொண்டிருக்கும் போது பொது பல சேனா அமைப்பு - கைதொழில் அபிவிருத்தி மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை தொடர்பில் கதைத்தார்.
வில்பத்து காணி விவகாரம் தொடர்பில் பொது பல சேனா ரிஷாட்டை சீண்டியது. அச்சம்பவம் மேல் மாகாண சபை தேர்தல் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்றது. அதேவேளை தற்போது மீண்டும் கடந்த வாரம் பொது பல சேனா ஊடக சந்திப்பொன்றை நடத்தி ரிஷாடுக்கு சாட்டையடி கொடுத்தது.
கடந்த மார்ச் மாதமளவில் மேல்மாகாண சபை தேர்தல் நிறைவடைந்து 10 நாட்களுக்கு பொது பல சேனாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவிருப்பதாக அப்போதைய தேர்தல் பிரசாரங்களின்போது ரிஷாட் குறிப்பிட்டிருந்தார். எனினும் அது நடக்கவில்லை. வெறும் வார்த்தை ஜாலங்களாகவே இருந்தநிலையில் மக்கள் இன்று அதனை மறந்து விட்டனர்.
எனினும் இன்று மீண்டும் ரிஷாடுக்கு எதிராக பொது பல சேனா ஊடகவியலாளர் சந்திப்பை நடத்துவதும் அதற்கு பதிலடிகை ஊவா தேர்தல் பிரசாரத்தில் ரிஷாட் விடுவதுமாக இருக்கின்றது. இதன்போது நமக்குள் ஒரு சந்தேகம் ஏழாமல் இருக்குமா?
முஸ்லிம் சமூகத்தை ஏமாற்ற இவர்கள் நடிக்கின்றனரா என்பது இன்றுள்ள கேளிவியாக இருக்கின்றது. ஏனெனில் கடந்த வருடம் குருநாகல் குளியாபிடிய பகுதியில் பொது பல சேனாவினர் முஸ்லிம்களுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை நடத்தியது. இதில் குர்ஆன் அவமானப்படுத்தப்பட்டது. இதனை கண்டித்து பாராளுமன்றத்தில் எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க உரை ஒன்றை நிகழ்திதினார். அதுவும் முஸ்லிம் மக்களுக்காகவே குரல் கொடுத்தார். இந்நிலையில் இந்த உரையை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்ந்தும் குறுக்கிட்டு குழப்பினார். அத்தோடு முஸ்லிம்கள் தொடர்பில் ரணில் கதைக்க வேண்டியதில்லை எனவும் தெரிவித்தார். இதன் படி அன்று ரணிலை குழப்பிய ரிஷாட் பொது பல சேனாவுக்கு சார்பாக செயற்பட்டார். ஆனால் தேர்தல் காலம் வரும்போது பொது பல சேனாவுடன் முரண்பட்டுக்கொண்டு முஸ்லிம்களிடம் நல்ல பெயர் எடுத்து வாக்குகளை சூறையாட முயற்சிக்கிறாரா. இது இரு தரப்பு இணைந்து நடத்தும் கூட்டு நாடகமா....????
Post a Comment