Google X பற்றி உங்களுக்கு தெரியுமா?
Monday, September 1, 20140 comments
இணைய உலகில் வேரூன்றிய போதிலும் தனது கிளைகளை பல்வேறு தொழில்நுட்ப திசைகளில் பரப்பி வரும் கூகுள் நிறுவனம் தற்போது மற்றுமொரு புதிய முயற்சியில் களமிறங்கியுள்ளது.
Google X என்ற திட்டத்தின் கீழ் Project Wing என பெயரிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்புதிய முயற்சியில் தானாகவே இயங்கக்கூடிய ட்ரோன் வகை விமானங்களை தயாரித்து வருகின்றது.
இந்த விமானங்களைப் பயன்படுத்தி டெலிவரி சேவையை வழங்கவுள்ளதுடன், இதன் மூலம் பயனர்கள் 30 நிமிட நேரத்தினுள் ஒன்லைனில் கொள்வனவு செய்யும் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இரண்டு வருடங்களாக மேற்கொண்ட முயற்சியின் பயனாக இது சாத்தியப்பட்டுள்ளது.
Post a Comment