பொதுபல சேனாவின் அச்சுறுத்தல்கள் குறித்து முஸ்லிம் கவுன்ஸில் ஜனாதிபதியிடம் முறைப்பாடு
Monday, September 29, 20140 comments
பொதுபல சேனா அச்சுறுத்தல்கள் குறித்து முஸ்லிம் கவுன்ஸில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் முறைப்பாடு செய்துள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அச்சுறுத்தல் விடுத்தார் என முஸ்லிம் கவுன்ஸில் குற்றம் சுமத்தியுள்ளது.
969 பௌத்த கடும்போக்குடைய அமைப்பின் தலைவர் அசீன் விராதுவை இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்க வேண்டாம் என முஸ்லிம் கவுன்ஸில் கோரியிருந்தது.
அசீன் விராது தேரர் இலங்கைக்கு விஜயம் செய்வதனை தடுக்க முஸ்லிம் கவுன்ஸிலுக்கு உரிமை கிடையாது என ஞானசார தேரர் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்த ஆண்டு பேருவளை அளுத்கம பிரதேசங்களில் ஏற்பட்ட அவலங்களையும் கருத்திற்கொள்ளாது கலகொடத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட சில கடும்போக்குடைய தரப்பினர் தொடர்ச்சியாக குரோத பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக முஸ்லிம் கவுன்ஸில் தெரிவித்துள்ளது.
புனித குர்ஆன் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பு, பிழையானதும் குரோத உணர்வைத் தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்து வருகின்றது.
புனித குர்ஆன் தொடர்பிலான ஞானசார தேரரின் விமர்சனங்களுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றிலும், பௌத்த சாசன அமைச்சின் சமய விவகாரப் பிரிவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் கவுன்ஸில் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளது.
தமது அமைப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலேயே ஞானசார தேரர் கருத்து வெளியிட்டு வருவதாக முஸ்லிம் கவுன்ஸில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment