இந்தோனேசியாவில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் 100 கசையடிள்
Monday, September 29, 20140 comments
இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் ஓரினச்சேர்க்கையை தடைசெய்து சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு 100 கசையடிகள் கொடுக்கப்படும்.
திருமணத்துக்கு வெளியில் பாலுறவை வைத்துக்கொள்பவர்களுக்கும் இதே தண்டனை அளிக்கப்படும்.
ஆச்சே மாகாணம் கடுமையான இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்திவருகின்றது.
இந்தோனேசியாவின் மற்றப் பகுதிகளில் ஓரினச்சேர்க்கைக்கு தடைஇல்லை.
அரசாங்கத்துக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையில் தொடர்ந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக பத்தாண்டுகளுக்கு முன்னர் உடன்பாடு ஒன்று எட்டப்பட்டது.
இதன்படி, ஆச்சே மாகாணத்தில் மட்டும் இஸ்லாமிய சட்டக் கோவையான ஷரீஆ சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
ஒருபால் உறவுக்கு தண்டனை அறிவித்துள்ள புதிய சட்டம் மனித உரிமைகளுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு என்று அம்னஸ்டி இண்டர்நேஷனல் கூறியுள்ளது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment