சுய இன்பம் பழக்கத்தை நிறுத்துவதற்கான அருமையான சில வழிகள்!

Sunday, September 7, 20141comments


மன அழுத்தம் மற்றும் பாலியல் டென்ஷன்களை நீக்க சுய இன்பம் காண்பது உதவுவதால், அது உடல் நலத்திற்கு நல்லது என பலரும் கூறுகின்றனர். ஆனால் சுய இன்பம் காண்பதால் அதற்கு நாம் அடிமையாகி விடுகிறோம் என்பதே உண்மையாகும். இதனால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நீங்கள் பல வலிகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஆய்வுகளின் படி, ஒரு வாரத்திற்கு 7 தடவைக்கும் மேல் சுய இன்பம் அனுபவிக்குகிறீர்களானால் நீங்கள் அதற்கு அடிமையாகி விடுகிறீர்கள்.

அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காண்கையில் ஆண்கள் மற்றும் பெண்களின் பிறப்புறுப்புகளில் புண்களும் வீக்கமும் ஏற்படும். பல சூழ்நிலையில், அடிமையானது கட்டுக்கடங்காமல் போய் விட்டால், ஆண்களுக்கு விந்தணு சுரப்பது கடினமாகி விடும். அதற்கு காரணம் சீரான முறையில் சுய இன்பம் காண்கையில் விந்தணு எண்ணிக்கை குறையத் தொடங்கி விடும்.

அளவுக்கு அதிகமாக சுய இன்பம் அனுபவிக்கும் போது விரைவுக்கலிதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இது உங்கள் பாலியல் வாழ்க்கையை பெரிதளவில் பாதிக்கலாம். சுய இன்பம் அனுபவிப்பதற்கு அடிமையாகாமல் இருப்பதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளது. இந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு பல வகையான வழிகளும் இருக்கவே செய்கிறது.

சுய இன்பம் காணும் பழக்கத்தை நிறுத்த, அதனை தூண்டும் சில விஷயங்கள நீங்கள் தவிர்க்கலாம் அல்லது நிராகரித்தே விடலாம். அளவுக்கு அதிகமான சுய இன்பத்தை தவிர்க்க சில புதிய பழக்கங்களை பின்பற்ற தொடங்கலாம். சுலபமான முறையில் சுய இன்பம் காணும் பழக்கத்தை விடுவதற்கு, இதோ சில வழிகள். இந்த எளிய வழிகள், ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி, பாதுகாப்பானதாக இருக்கும்!

புதிய பழக்கங்களை விரும்ப தொடங்குங்கள்


புதிய விஷயங்களில் உங்கள் நாட்டத்தை செலுத்தினால், அளவுக்கு அதிகமாக சுய இன்பம் அனுபவிப்பதை சுலபமாக நிறுத்தலாம். புதிய பொழுது போக்கில் ஈட்டுபட்டால், உங்கள் மனது அதனை நோக்கி திசை திரும்பும். இதனால் நீங்களும் அதில் பிசியாக இருப்பீர்கள். அதனால் நீச்சல், உடற்பயிற்சி, உடலை கட்டுக்கோப்பாக வளர்த்தல் போன்ற புதிய பொழுது போக்கில் ஈடுபடுங்கள்.


விளையாட்டில் ஈடுபடுங்கள்

சுய இன்பம் அனுபவிப்பதை காட்டிலும் விளையாட்டில் ஈடுபட்டால் அதே அளவிலான, ஏன் கூடுதலாக கூட சுகம் கிடைக்கும். கால் பந்து, எறிபந்து மற்றும் கூடைப்பந்து போன்ற சில விளையாட்டுக்களில் ஈடுபடலாம். இந்த விளையாட்டுக்கள் உங்களை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க உதவும்.


தனிமையை தவிர்க்கவும்

சுய இன்பம் காண்பதை நிறுத்துவதற்கான எளிய வழிகளில் இதுவும் ஒன்றாகும். நீங்கள் தனியாக இருக்கையில், பொழுதை கழிக்க இதில் எல்லாம் தான் கவனம் செல்லும்.

சீக்கிரமாக தூங்குதல்

அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காண்பதை நிறுத்த மற்றொரு வழி - சீகிராமாக தூங்குவது. ஆராய்ச்சிகளின் படி, நேரம் கழித்து தூங்க செல்பவர்களுக்கு நீல படம் பார்ப்பதிலும் காம புத்தகங்கள் படிப்பதிலும் ஈடுபாடு செல்லுமாம். இதனால் சுய இன்பம் காண்பது அதிகரிக்கும் தானே.


ஆபாச விடியோக்கள்/டிவிடிக்களை தூக்கி போடுங்கள்

பிரச்சனையை சமாளிக்க நீங்கள் வைத்திருக்கும் ஆபாச டிவிடிக்களை தூக்கி எறியுங்கள். ஆபாசமானவைகளை தூக்கி எறிந்தாலே, செய இன்பம் காண்பதில் உள்ள ஆர்வமும் மெல்ல குறையும். சுய இன்பத்திற்கு அடிமையாகாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு சிறந்த வழியாகும்.




ஆன்மீகம் உதவும்



ஆன்மீகத்தில் ஈடுபட்டால் உங்கள் மனம் அமைதி பெறும். அதனால் ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு இந்த தீய பழக்கத்தை கைவிட முயற்சி செய்யுங்கள்.




மனதிடம் பேசுங்கள்

சுய இன்பம் காண்பதை நிறுத்த, உங்களுக்கு வேண்டியது மன உறுதி தான். இந்த பழக்கம் பிறப்பது மனதில் இருந்து தான். அதனால் சுய இன்பம் காண்பதை நிறுத்த வேண்டுமானால் உங்கள் மனதுடன் பேசுங்கள். இந்த பழக்கத்தை சுலபமாக நிறுத்தி விடலாம்.


கைகளை சுறுசுறுப்பாக வைத்திடுங்கள்

கைகளை பிறப்புறுப்பு பகுதிக்கு கொண்டு போகாமால், எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும். அந்த உணர்வு வந்து விட்டால், உடனே கைகளை கொண்டு சுத்தப்படுத்துதல், தோட்ட வேலை அல்லது வீடியோ கேம் விளையாடுவது போன்ற வேளைகளில் ஈடுபடுங்கள்.



குளிப்பது அந்த உணர்வை தூண்டுகிறதா?

குளியல் தொட்டி அல்லது ஷவரில் குளிக்கும் போது அந்த உணர்வை தூண்டுகிறதா? அப்படியானால் குளியலறையில் நீண்ட நேரம் செலவிடாதீர்கள்.


உணவு பழகத்தில் மாற்றம்

சுய இன்பம் காணும் பழக்கத்தை கை விட உங்கள் உணவு பழக்கத்தை மாற்றுவதும் கூட எளிய வழிகளில் ஒன்றாக விளங்குகிறது. மற்ற நடவடிக்கைகளில் வெற்றிகரமாக ஈடுபட, அதற்கு தேவையான ஆற்றல்களை பெறுவதற்கு அதற்கான உணவுகளை உண்ணுங்கள்.



தியானம்

தியானம் என்பது மனதுக்கும் உடலுக்கும் நல்லது. தியானத்தில் ஈடுபடும் போது, சுய இன்பம் அனுபவிப்பதை மறந்து பிற விஷயங்களை பற்றி சிந்திக்க, மனதும் உடலும் ஒத்துழைக்கும். இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...
Share this article :

+ comments + 1 comments

Anonymous
9/09/2014 2:57 PM

ஆணியை புடுன்காதீங்கோ.

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham