பாகிஸ்தான்- இந்திய வெள்ளத்துக்கு 200 பேர் பலி!
Sunday, September 7, 20140 comments
பாகிஸ்தான் கிழக்குப் பிராந்தியங்களிலும் இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்திலும் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது.
பருவ மழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 110 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் அரச அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் எதிர்வரும் நாட்களில் அதிகளவான மழை பெய்யலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.வெள்ளப் பெருக்கு அதிகரிக்கும் பட்சத்தில் உயிரிழப்புக்களும் உயரக் கூடும் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்வடைந்துள்ளது.கடந்த ஐந்து நாட்களில் வெள்ள அபாயத்தில் சிக்கியிருந்த 2,00ற்கும் அதிகமானவர்களை பாதுகாப்பு தரப்பினர் மீட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் முழுவதும் மேலதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என வானிலை அவதான மையம் கூறியுள்ளதுடன், நாளை இந்த நிலைமையில் முன்னேற்றம் அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுகாஷ்மீர் மாநிலத்தில் 60 ருடங்களுக்கு பின்னர் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன.
Post a Comment