இலங்கையர்கள் இரு ஐக்கிய அரபு இராச்சியத்தில் பலி
Sunday, September 14, 20140 comments
வடக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தில் இரண்டு இலங்கையர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
23 வயதான இலங்கையர் ஒருவர் ஹோட்டல் நீர்த்தடாகத்தில் நண்பர்களுடன் வௌ்ளிக்கிழமை நள்ளிரவில் நீந்திக் கொண்டிருந்ததாகவும், பின்னர் அவரது நண்பர்கள் தங்கள் அறைகளுக்கு சென்றுவிட்டதாகவும் தெரிகிறது.
இதனையடுத்து அவரது உடல் மறுநாள் காலை நீச்சல் தடாகத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மற்றுமொரு 20 வயதான இலங்கையர் கடற்கரையில் நீந்திக்கொண்டிருந்த போது, நீரில் மூழ்கியுள்ளார்.
பின்னர் அவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், பலியானதாக அந்நாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment