ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போருக்கு 40 நாடுகள் ஆதரவு
Sunday, September 14, 20140 comments
மத்திய கிழக்கு நாடுகளில், இஸ்லாமிய தீவிரவாதிகளை கட்டுப்படுத்தும் முகமாக அமெரிக்காவினால் தெரிவிக்கப்பட்ட யுக்திகளுக்கு பத்து அரேபிய நாடுகள் உட்பட 40 நாடுகள் தமது ஒத்துழைப்பை வழங்க முன்வந்துள்ளன.
இதற்கான ஒப்பந்தத்தில் இந்த நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன.
இந்த நிலையில், உடனடியாக 600 நன்கு பயிற்சி பெற்ற துருப்பினரை மத்திய கிழக்கிற்கு அனுப்ப அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.
முதலில் ஐக்கிய அரேபிய ராட்சியத்திற்கே இவர்கள் அனுப்பப்படுவதாக அவுஸ்திரேலிய பிரதமர் ரோனி அபோட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்று பின்னிரவு அமெரிக்க ராஜாங்க செயலர் ஜோன் கெரி பிரான்ஸ் தலைநகர் பாரிசை சென்றடைந்துள்ளார்.
நான்கு நாட்கள் அங்கு தங்கியிருக்கும் அவர், இஸ்லாமிய பிரிவினை வாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளபடவுள்ள உத்தேச இராணுவ நடவடிக்கைகளுக்கு ஏனைய மேற்குலக நாடுகளின் ஆதரவினை கோருவார்.
இதற்கு ஏற்ற வகையில், பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு குறித்து பிரான்ஸ் நாளை உச்சி மாநாடொன்றை பாரிசில் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
அதேவேளை, ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளை பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு ஏற்ற வகையிலான திட்டம் ஒன்றை கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெளியிட்டுள்ளார்..
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment