வக்பு சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் .ஆதம்பாவா தென் கொரியாவுக்கு விஜயம்
Sunday, September 14, 20140 comments
அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா தலைவரும் இலங்கை வக்பு சபை உறுப்பினருமான அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி நாளை மறுதினம் திங்கட்கிழமை தென் கொரியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
தென் கொரியாவின் சியோல் நகரில் 3 தினங்கள் இடம்பெறவுள்ள சமாதானத்திற்கான சமயங்களின் சர்வதேச மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதியாக பங்குபற்றுவதற்காகவே அவர் அங்கு செல்கிறார்.
இலங்கை சார்பில் அம்மாநாட்டில் கலந்து கொள்ளும் ஒரே ஒரு பிரதிநிதியாக அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஒரு வார காலம் தென் கொரியாவில் தங்கியிருக்கும் அவர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சமயப் பெரியார்களையும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment