ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சி அமைச்சர்களான நிமல்சிறிபால டி சில்வா மற்றும் டிலான் பெரேரா ஆகியோரின் தொகுதிகள் தோல்வியடைந்தமை தற்போது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
அமைச்சர் டிலான் பெரேரா ஹாலி-எல தொகுதி அமைப்பாளராவார். அந்த தொகுதியில் 2009 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -27,088 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றது. ஐக்கிய தேசிய கட்சி - 10,653 வாக்குகளையும் மட்டுமே பெற்று 16,435 வாக்குகள் வித்தியாசத்தில் ஐ.தே.க. தோல்வியை தழுவியிருந்தது. இந்நிலையில் இம்முறை ஐக்கிய தேசிய கட்சி - 23,900 பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 21,104 மட்டுமே பெற்று 2,796 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
பதுளை தேர்தல் தொகுதியின் ஐ.ம.சு.மு. அமைப்பாளராக அமைச்சர் நிமல்சிறிபால டி. சில்வா இருக்கின்றார். இந்நிலையில் அந்த தொகுதி 2009 ஆம் ஆண்டு 21,386 வாக்குகளை பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியது. ஐக்கிய தேசிய கட்சி -12,084 வாக்குகளை பெற்ற ஐக்கிய தேசிய கட்சி 9,302 வாக்குகள் வித்தியாசத்தில் தேல்வி கண்டது. இம்முறை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி - 21,099 வாக்குகளை பெற்று வெற்றியடைந்துள்ளதையடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 15,001 வாக்குகளை பெற்று 6,098 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.
12 வருடங்களின் பின்னர் பதுளை தொகுதியை ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் கைப்பற்றியுள்ளது.

Post a Comment