ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இறுதி தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படவுள்ளன.
ஐக்கிய நாடுகள் ஆணையகம் மற்றும் ஆப்கானிஸ்தான் தேர்தல் அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக வாக்கு கணிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த ஜுன் மாதம் தேர்தல் இடம்பெற்ற நிலையில், அதில் முறைகேடுகள் ஏற்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில், கணக்காய்வு செய்யப்பட்ட பின்னர் இன்றைய தினம் இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment