அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக கல்முனையில் த.தே. கூட்டமைப்பினர் முஸ்லிம் காங்கிரஸுடன் பேசுவதனை தவிர்த்துக்கொள்ளல் வேண்டும்.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த கால த.தே. கூட்டமைப்பு அரசியலும் தற்கால அரசியலும் தாங்கள் அறிந்திருந்தும் எமது மாவட்டத்தில் உள்ள எவரது கருத்துக்களுக்கும் இடமளியாது தாங்களாகவே முடிவெடுப்பது பெரும் வேதனையைத்தருகின்றது.
தற்போது எமது மாவட்டத்தில் எம்மையும் எமது அரசியலையும் எமது தேசியத்தினையும் அழித்து ஒழிக்கும் ஒரே நோக்குடன் செயற்படும் முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் அம்பாறையில் அதுவும் குறிப்பாக கல்முனையில் பேச்சு நடத்துவதனை தாங்கள் ஒட்டு மொத்தமாக எதிர்க்கின்றோம் என த.தே. கூட்டமைப்பின் தலைமைக்கு அனைத்து அம்பாறை மாவட்ட த.தே. கூட்டமைப்பு உறுப்பினர்கள் கையொப்பம் இட்டு கடிதம் ஒன்றினை கையளித்திருக்கின்றனர்.
இம்முடிவினை எடுத்ததற்கான காரணங்களை பின்வருமாறு பட்டியல்படுத்தி இருக்கின்றார்கள்.
கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு நேரடி எதிரியாக முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட்டது.
மத்திய மற்றும் கிழக்கு மாகாண சபையின் ஊடாக வழங்கப்படும் வேலை வாய்ப்புக்களில் முற்றாக தமிழர்கள் புறக்கணிப்பு
கிழக்கு மாகாண சபை ஊடாக பகிர்ந்தளிக்கப்படும் அபிவிருத்தி விடயங்களில் தமிழர் பகுதிகள் புறக்கணிப்பு
கல்முனை மாநகர சபை, பொத்துவில் பிரதேச சபை ஊடாக தமிழர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதிகள், கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட முச்சக்கரவண்டி சங்கத்தின் பிரச்சினை, வீதிகளுக்கு பெயர் மாற்றுவத்கான பிரச்சினை, நில ஆக்கிரமிப்பு, காலாசார சீர்கேடுகள் என்பவற்றுக்கு துணை நின்றவர்கள் மு.கா.வினரே.
இவை யாவற்றையும் அறிந்திருந்தும் இவர்களுடன் பேச்சு நடத்தியாக வேண்டுமா என ஒட்டு மொத்த த.தே.கூட்டமைப்பினரும் தலைமைகளுக்கு கடிதம் மூலம் தங்களது கையொப்பத்தினை இட்டு கையளித்திருப்பதாக அம்பாறை மாவட்ட த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

Post a Comment