பதவி விலகுகிறார் அமைச்சர் டிலான் பெரேரா ?
Sunday, September 28, 20140 comments
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகத் தயாரென அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஊவா மாகாணசபைத் தேர்தலின் போது ஆளும் கட்சி ஹாலியெல மற்றும் பதுளை தேர்தல் தொகுதிகளில் தோல்வியடைந்திருந்தது.
ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர்களான டிலான் பெரேரா மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் இந்த இரண்டு பகுதிகளினதும் தொகுதி அமைப்பாளர்களாக கடமையாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சியை இவ்வாறான தேர்தல் தோல்விகள் குறிப்பதாகவும் இதனால் தொகுதி அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலக்க வேண்டுமென ஜனாதிபதியிடம் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
இது தொடர்பில் சிங்கள ஊடகமொன்று டிலான் பெரேராவிடம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதலளித்த அவர்,
தாம் தொகுதி அமைப்பாளர் பதவியை துறக்கத் தயார் என தெரிவித்துள்ளார். தேர்தல் தோல்விக்காக ஜனாதிபதி திட்டவில்லை.
தோல்வியடைந்த தொகுதிகளின் அமைப்பாளர்கள் பதவி விலக்கப்பட வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து.
தொகுதி அமைப்பாளர் பதவி இல்லாத காரணத்தினால் நான் கட்சியை விட்டு போக மாட்டேன்.
எவ்வளவு சேறு பூசினாலும் டிலான் பெரேராவை கீழே வீழ்த்த முடியாது.
வத்தளை பிரதேசத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சாராய போத்தல்கள், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதுளை மக்களுக்கு ஆற்றிய சேவையை மறக்கச் செய்துள்ளன என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment