இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஆராய சிறுபான்மைக் கட்சிகள் இணைவு
Sunday, September 14, 20140 comments
நாட்டிலுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து அரசியல் யாப்புச் சீர்திருத்தத்துக்கான புதிய யோசனைகளை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறான சட்டமொன்றினால் இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறித்து பொதுத் தீ்ர்மானமொன்றை எடுப்பதற்காக எதிர்க் கட்சியிலுள்ள பல கட்சிகள் ஒரே மேடையில் அமர்ந்து ஆலோசிக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 15 ஆவது மாநாட்டின் பின்னர் சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து கலந்தாலோசனை செய்ததத் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹஸன் அலி இன்றைய சிங்கள ஊடமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment