தொடர்ந்து முதலிடத்தில் விண்டோஸ் 7

Sunday, September 14, 20140 comments


விண்டோஸ் 8 மற்றும் 8.1 இயங்குதளங்களை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
இத்தகவலை இவற்றை கண்காணிக்கும் நெட் அப்ளிக்கேஷன் என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு இயங்குதளங்களை பன்னாட்டளவில் 13.37% பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

ஜூலையில் 6.56% பங்கினைக் கொண்டிருந்த விண்டோஸ் 8.1, தற்போது 7.09% ஆக உயர்ந்துள்ளது.

விண்டோஸ் 8, 5.92% லிருந்து 6.28% ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும், விண்டோஸ் 7 தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது, மொத்த கம்ப்யூட்டர்களில், 51.21% பேர் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.

விண்டோஸ் எக்ஸ்பி தொடர் பயன்பாடு குறித்து, மைக்ரோசாப்ட் பல அபாய எச்சரிக்கை வழங்கிய பின்னரும், இந்த சிஸ்டத்தினைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, இன்னும் கணிசமாக இருக்கின்றது. 23.89% பேர் இன்னும் இதனைப் பயன்படுத்துகின்றனர்.

லினக்ஸ் பயன்படுத்துவோர் 1.67% ஆகவும், மேக் ஓ.எஸ். 10.9 பயன்படுத்துவோர் 4.29% ஆகவும் உள்ளனர்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham