உலமா சபையின் நுவரெலிய மாவட்டக் கிளை புனர் நிர்மானம்
Tuesday, September 2, 20140 comments
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட, பிரதேசக் கிளைகள் மூன்றான்டுக்கு ஒரு முறை புனர் நிர்மானம் செய்ய வேண்டுமென ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் நாடளாவிய ரீதியிலே கிளைகள் புனர் நிhமானம் செய்யப்பட்டு வருகின்றது.
இதற்கமைய நுவரெலிய மாவட்டம் மற்றும் அதன் பிரதேசக் கிளைகளுக்கான நிர்வாகத் தெரிவு சென்ற 1435.10.27 -2014.08.24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹபுகஸ்தலாவ ஜுமுஆ மஸ்ஜித் வீதியில் அமைந்துள்ள தாருள் உலூம் அல்-ஹாமிதிய்யாஹ் அரபுக் கலாசாலையில் நடைபெற்றது.
இக் கூட்டம் காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது. இதில் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும், ஜம்இய்யாவின் சமூக சேவைப் பிரிவின் செயலாளருமான அஷ்-ஷைக் கே.எம். அப்துல் முக்ஸித் அவர்கள் கலந்து கொண்டு சகவாழ்வு சம்பந்தமான முன்னெடுப்புகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டுமென முக்கிய கருத்துக்களை முன்வைத்தார்கள்.
இக்கலந்துரையாடலில் நுவரெலிய மாவட்ட மஸ்ஜித் நிர்வாகிகளும் கலந்து கொன்டார்கள்.
குறித்த இக் கூட்டத்தில் பின்வருவோர் நடப்பு வருட உத்தியோகத்தர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
நுவரெலிய மாவட்டம்
தலைவர் : அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் ஹாலிக்
செயலாளர் : அஷ்-ஷைக் ஏ.எம். சிராஜ்
பொருளாளர் : அஷ்-ஷைக் எம்.எச். ராபி
நுவரெலிய மாவட்ட பிரதேசக் கிளைகள்
1) ஹபுகஸ்தலாவ நகர பிரதேசக் கிளை
தலைவர் : அஷ்-ஷைக் ஏ.டப்ளியு. அப்துர் ரஹீம்
செயலாளர் : அஷ்-ஷைக் ஏ.எஸ்.எம். அக்ரம்
பொருளாளர் : அஷ்-ஷைக் எம்.எச். ராபி
2) ஹட்டன் நகர பிரதேசக் கிளை
தலைவர் : அஷ்-ஷைக் ஜ.எம். முபாரக்
செயலாளர் : அஷ்-ஷைக் எந்.ஏ.எம். அஸ்ஹர்
பொருளாளர் : அஷ்-ஷைக் எம். அரூஸ்
3) நுவரெலிய நகர பிரதேசக் கிளை
தலைவர் : அஷ்-ஷைக் ஏ.எம். சிராஜ்
செயலாளர் : அஷ்-ஷைக் ஜ.எம். பழீல்
பொருளாளர் : அஷ்-ஷைக் ஆர். எம். பைரூஸ்
Post a Comment