தர்ம போதனைகளை வழங்கும் காலம் முடிந்துவிட்டது. போதனைகளில் உள்ளவற்றை பின்பற்றவேண்டிய காலமே தற்போது மலர்ந்துள்ளது. இதனால், தூங்கிக்கொண்டிருப்பவர்களை எழுப்புவதற்கு பொது பல சேனா அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள தொழிற்சங்கங்களை நல்ல வழியில் கொண்டுசெல்லும் நோக்கத்தில், அச்சங்கங்களுக்கு பொது பல சேனா அமைப்பு தலைமை தாங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு, கிருளப்பனை பிரதேசத்தில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே ஞானசார தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Post a Comment