பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்து பாக். பிரஜைகள் விடுதலை
Wednesday, September 3, 20140 comments
கைது செய்யப்பட்டு பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 60 பாகிஸ்தான் பிரஜைகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்த காரணத்திற்காக இவர்கள் கைது செய்யப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கம் குறிப்பிட்டது.
அகதிகள் என்ற அடிப்படையில் இலங்கையில் தங்கியுள்ள பாகிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது.
பாகிஸ்தானியர்கள் இலங்கையில் தங்கியிருப்பது பாதுகாப்பு கெடுபிடியை ஏற்படுத்துவதோடு சுகாதார நிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அரசாங்க தரப்பில் அறிவிக்கப்பட்டதை அடுத்தே மேன்முறையீட்டு நீதிமன்றம் இவ்வுத்தரவைப் பிறப்பித்தது.
அதன் அடிப்படையில் 60 பாகிஸ்தான் பிரஜைகளும் பூசா முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு விரைவில் நாடு கடத்தப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment