ஊழல் குற்றசாட்டிலிருந்து நவாஸ் செரீப் விடுதலை
Sunday, September 21, 20140 comments
ஊழல் குற்றசாட்டு வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
2000ஆம் ஆண்டில் நவாஸ் செரீப் மற்றும் அவரது சகோதரர் ஷாபாஷ் செரீப் குடும்பத்தினர் ஊழல் புரிந்ததாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.
எனினும் அந்த வழக்குகள் விசாரிக்கப்படாத நிலையில் இருந்து வந்தது.
இந்த நிலையில் அதை மீண்டும் விசாரிக்க வலியுறுத்தி தேசிய லஞ்ச ஒழிப்பு துறை, நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தது.
இதன்படி, அந்த வழக்கை விசாரணை செய்த லஞ்ச ஒழிப்பு நீதிமன்ற நீதிபதி அன்வர் அகமது, இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் பிரதமர் நவாஸ் செரீப் மற்றும் அவரது சகோதர், குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment