நாட்டில் உள்ள ஷரிஆ சட்டம் பாரிய பிரச்சினையாக உள்ளதாகவும் அதனை நீக்க வேண்டுமேனவும் பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
பொதுபல சேனாவின் தலைமைக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவ்வமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நாட்டில் ஷரிஆ சட்டத்தின் அடிப்படையில் இயங்கும் வங்கி முறைமை தடை செய்யப்பட வேண்டும். இதற்காக நாடளாவிய ரீதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம்.
நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையால் நாட்டில் பிரச்சினை இல்லை. ஆனால், அதனைவிடப் பயங்கரமாகவுள்ள இஸ்லாமிய ஷரிஆ சட்டத்தை நீக்க வேண்டும். இதுவே எமது பாரிய பிரச்சினையாகும்.
இந்த நாட்டில் ஷரிஆ சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என பாராளுமன்றத்தில் மசோதா கொண்டுவருவதும் சட்டவிரோதமானது. அதனை நிறைவேற்றி சட்டமாக்குவதும் சட்ட விரோதமானது.
இந்த நாட்டில் காஸி நீதிமன்றங்கள் ஷரிஆ சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன. இவை எமது நாட்டுக்குத் தேவையற்றது.
மேலும், ஷரிஆ சட்டத்தை நடைமுறைப்படுத்துவதனை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தென் கிழக்குப் பல்கலைக்கழகம் இந்த நாட்டுக்கு மிகவும் பயங்கரமான ஒன்றாகும்.
பல்கலைக்கழகத்தில் உள்ள சகல பீடங்களும் ஷரிஆ சட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே காணப்படுகின்றன.
இஸ்லாமிய கற்கைகளுக்கான பிரிவு, இஸ்லாமிய சிந்தனைக்கும், கலாச்சாரத்துக்குமான பிரிவு, இஸ்லாமிய ஷரிஆ சட்டப் பிரிவு, இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி முறைமைப் பிரிவு என்ற பெயர்களில் பல்வேறு பீடங்கள் இயங்குகின்றன.
இந்த நாட்டிலிருந்து ஷரிஆ சட்டம் துடைத்தெறியப்பட வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக சட்டங்களை நடைமுறைப்படுத்தும் இந்த தனியார் சட்டத்தை நீக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
.jpg)
Post a Comment