ஊவா முஸ்லிம்களை குழப்பிவிட்டு ஹக்கீமும் ரிஷாடும் வெளிநாடுகளுக்கு பறக்கின்றனர்
Sunday, September 14, 20140 comments
ஊவா மாகாண சபை தேர்ததல் பிரசாரங்கள் சூடுபிடித்திருக்கின்ற நிலையில் அமைச்சர்களான ஹக்கீமும் ரிஷாடும் மக்களை குழப்பிவிட்டு வெளிநாடுகளுக்கு பறக்கின்றனர் என அரசியல்வாதி ஒருவர் தெரிவித்தார்.
முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை ஊவா மாகாண சபையில் உறுதி செய்ய வேண்டும் என்று காட்டமான இனவாத உரைகள் மூலம் மக்களை உசுப்பேத்திய இவர்கள் கடைசி நேரத்தில் எல்லா வற்றையும் கைவிட்டு விட்டு வெ ளிநாடு செல்வதானது எல்லோருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஈரானில் நடைபெறவிருக்கும் சர்வதேச சட்ட மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று இரவு அந்நாட்டுக்கு பயணமாகவுள்ளார். ஒருவாரகாலமாக அங்கு தங்கியிருப்பார் எனவும் தெரியவருகிறது.
இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று கட்டார் நாட்டுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு கட்டார் செல்லும் அவர் இரு நாடுகளுக்குமிடையில் பொருளாதார மேம்பாடுகள் மற்றும் முதலீடுகள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.
மு.கா. மற்றும் அ.இ.ம.கா. கட்சிகள் கூட்டிணைந்து இரட்டை இலை சின்னத்தில் ஊவா மாகாண சபையில் போட்டியிடுகின்றன. தேர்தலுக்கு இன்னும் 6 நாட்கள் எஞ்சியுள்ளன. தேர்தல் பிரசார நடவடிக்கைகளை இன்னும் மூன்று தினங்களில் நிறைவு செய்துகொள்ள வேண்டிய நிலையில் இரு கட்சிகளின் தலைவர்களும் வெளிநாடுகளுக்கு செல்கின்றமையானது பல சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுகள் என தனி அமைச்சுக்கள் இருக்கின்ற நிலையில் அவ்வமைச்சின் விடயங்கள் தொடர்பில் அமைச்சர் ரிஷாட் கட்டார் சென்றுள்ளமை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
எனினும் இரு கட்சிகளுக்கிடையில் ஏற்றத்தாழ்வு பிரச்சினை எழுந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தோடு தேல்வி நிச்சயம் என்றநிலையில் இருவரும் வெ ளிநாடுகளுக்கு சென்றுள்ளனர் என்றும் தெரியவருகின்றது என்றும் குறித்த அரசியல்வாதி தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment