டில்சானை எச்சரித்த சர்ச்சையில் இருந்து சேசாட் விடுபட்டார்?
Sunday, September 14, 20140 comments
இலங்கை கிரிக்கட் வீரர் திலகரட்ண டில்சானிடம் மத ரீதியாக கருத்துக்களை முன்வைத்து எச்சரித்த சர்ச்சையில் இருந்து, பாகிஸ்தான் கிரிக்கட் வீரர் அஹமட் சேசாட் தப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தம்புள்ளையில் அண்மையில் இடம்பெற்றிருந்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியின் நிறைவில், திலகரட்ண டில்சானை, அஹமட் சேசாட் எச்சரித்திருந்தார்.
டில்சான் முஸ்லிம் மதத்தை தழுவாவிட்டால், நரகத்துக்கு செல்ல நேரும் என்று அவர் கூறினார்.
இது தொடர்பில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவிருந்தது.
எனினும் அதில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெறும் செம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்பதற்காக, அஹமட் சேசாட் லாஹ{ர் லயன்ஸ் அணியுடன் இணைந்துக் கொண்டுள்ளார்.
அவர் இந்தியாவுக்கு செல்லும் முன்னர் பாகிஸ்தான் கிரக்கட் சபை அவரை அழைத்து மதம் சார்ந்த கருத்துக்களை வெளியிட வேண்டாம் என்று எச்சரித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் அவருக்கு எதிராக நடத்தப்படவிருந்த ஒழுக்காற்று நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment