அல்குர்ஆன் அவமதிப்பு வழக்கு; ஞானசாரவுக்கு எதிராக சிங்கள சட்டத்தரணிகள் ஆஜர்

Monday, September 1, 20141comments

   

அல்குர்ஆன் அவமதிப்பு தொடர்பிலான வழக்கு இன்று கோட்டை நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரவுக்கு எதிராக பல பிரபல சிங்கள சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகினர்.

அல்குர்ஆன் அவமதிப்பு தொடர்பில்  ஞானசார தேரருக்கு எதிராக கோட்டை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சிரேஷ்ட சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தலைமையில் சட்டத்தரணிகளான சரத் சிறிவர்தன, நாமல் ராஜபக்ஷ, மஞ்சுள பத்திராஜ, அசேல ரணவக்க, அசான் நாணயக்கார மற்றும் ஹர்சன ஹெட்டியாராச்சி உள்ளிட்ட பல பிரபல சிங்கள சட்டத்தரணிகள் ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

இதேவேளை, சிரேஷ்ட சட்டத்தரணி மைத்திரி குணரத்னவை அவதூறான வார்த்தைகளினால் அச்சுறுத்தியமை தொடர்பில் கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்குமாறு நீதவான் ஞானசார தேரருக்கு உத்தரவிட்டார். இது தொடர்பாக பலமுறை வாக்குமூலம் அளிக்க பொலிஸ் நிலையம் வருமாறு அழைப்பு விடுத்தும் ஞானசார வரவில்லை என கொம்பனித் தெரு பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இதனையடுத்தே பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கும் உத்தரவினை நீதாவினை நீதவான் மேற்கொண்டார். பின்னர் இந்த வழக்கு விசாரணை ஒக்டோபர் 20ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
Share this article :

+ comments + 1 comments

9/02/2014 2:18 AM

He is proving, by ignoring the Police orders to appear in the Police to give a statement on an entry made by a leading, that he is an out law. Police should know how to handle a leader of a Terrorist Organization and a criminal. Also Police should follow the normal procedure this type of occurrences. All are equal before the Law.

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham