இம்தியாஸ் பாகிர் மாகாரின் சேவை கட்சிக்கு தேவை - ரணில் கடிதம் மூலம் அழைப்பு
Sunday, September 28, 20140 comments
ஐக்கிய தேசியக் கட்சியின் மீள் எழுச்சிக்காக பாடுபட முன்வருமாறும் அதன் பொருட்டு கட்சியின் செயற்குழுவில் இணைந்து கொள்ளுமாறும் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காருக்கு ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் நேற்றைய தினம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஊவா தேர்தலில் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கியுள்ள ஆதரவைக் கருத்திற் கொண்டும் நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்றை நோக்கி உழைப்பதற்காகவும் கட்சியின் செயற்குழுவில் தாங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என தான் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
"நீங்கள் கட்சியை வளர்த்தெடுப்பதில் கடந்த காலங்களில் காத்திரமான பங்களிப்பை வழங்கியதை இந்த இடத்தில் நினைவு கூர்கிறேன். தற்போதைய நிலையில் தங்களின் பங்களிப்பு கட்சிக்கு அவசியப்படுகிறது. எனவேதான் இந்த அழைப்பை ஏற்று கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட முன்வருமாறும் அதன் பொருட்டு செயற் குழுவில் இணைந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கிறேன்" என்றும் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக கட்சியின் செயற்பாடுகளில் இருந்து சிறிது காலம் ஒதுங்கியிருந்தார். எனினும் ஊவா மாகாண சபைத் தேர்தலின்போது கட்சிக்கு ஆதரவான பிரசார நடவடிக்கைகளில் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment