இலங்கையில் உலமா தீவிரவாத அமைப்பாக செயற்படுகிறது: பொதுபலசேனா
Sunday, September 28, 20140 comments
இலங்கையிலுள்ள ஜம்இய்யதுல் உலமா அமைப்பு ஒரு தீவிரவாத அமைப்பாகும் என பொதுபலசேனா அமைப்பு இன்று அறிவித்தது.
சுகதாஸ உள்ளக அரங்கில் தற்போது இடம்பெறும் பொதுபலசேனா அமைப்பின் மகா சங்க மாநாட்டில் அந்த அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
" இந்த அமைப்பு சில வருடங்களுக்கு முன்னரே பதிவுசெய்யப்பட்டது. எனினும் இந்த ஜம்இய்யதுல் உலமா அமைப்பு ஒரு தீவிரவாத அமைப்பாகும்.
அத்துடன் இலங்கை ஒரு பௌத்த நாடே தவிர பல சமயங்கள் வாழும் ஒரு நாடல்ல. ஆனால் இலங்கையில் வாழும் பௌத்தர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
சில தீவிரவாத முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ குழுக்களினாலேயே பௌத்தர்களுக்கு எதிரான பிரச்சினை ஏற்படுகின்றது. இந்த பிரச்சினைகளை தீர்க்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறில்லாவிட்டால் இந்த அரசாங்கத்தை மாற்றுவதற்கு நாங்கள் வெட்கப்படமாட்டோம். சுமார் பல்லாயிரம் சட்டவிரோத குடிவரவு இலங்கையில் உள்ளது. இதற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதேவேளை, பொதுபலசேனா அமைப்பு பயங்கராவதிகள் என தெரிவிக்கப்படும் விடயத்தினை அந்த அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி நிராகரித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment