இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர் மடானி இலங்கைக்கு விஜயம்!
Monday, September 29, 20140 comments
இலங்கை ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர் இயாட் மடானி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக சவூதியில் உள்ள இலங்கை தூதரக தகவல்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் மடானியின் விஜயத்தை முன்னிட்டு முன்கூட்டிய ஏற்பாடுகளை செய்வதற்காக குழு ஒன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இந்த விஜயத்தின்போது மடானி, இலங்கையின் ஜனாதிபதி மற்றும் மதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வு அண்மையில் இடம்பெற்ற போது ஜனாதிபதி மடானிக்கான அழைப்பை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் முஸ்லிம் மக்களின் அதிருப்தியைப் போக்கிக் கொள்வதற்காகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்த யுக்தியைக் கையாண்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment